SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னிய முதலீடு விவகாரம் நாடாளுமன்றம் 2ம் நாளாக முடக்கம

2012-11-24@ 01:14:39

புதுடெல்லி : சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி தரப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் 2வது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அரசு அனுமதி கொடுத்ததை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை நேற்று காலை கூடியதும் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து, அவையின் மைய பகுதிக்கு ஓடிவந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு தரப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். பா.ஜ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்களும் கோஷமிட்டனர். அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில், பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் போட்டனர். அவர்களுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியினர் கோஷமிட்டனர். இதனால், அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் பகுஜன், சமாஜ்வாடி கட்சியினர் கோஷமிட்டதால் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு மீண்டும் கூடிய போதும் அமளி நிலவியதால் பிற்பகல் 2.30 மணி வரை மாநிலங்களவை ஒத்திப்வைக்கப்பட்டது. அப்போதும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதா விவகாரம் தொடர்பாக அமளி நிலவியது. அன்னிய முதலீடு விவகாரத்தை எழுப்ப பா.ஜ எம்.பி.க்கள் முயற்சி செய்தனர்.  இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

drug coupon card prescription coupons drug discount coupons
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்