SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேட்பு மனு தாக்கல் விவகாரம் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

2012-11-22@ 22:43:02

சென்னை: ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டையில் வேட்புமனு தாக்கல் செய்ததை, புவனகிரியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது ஜெயலலிதா மறைத்தது தவறு; முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? என்று கோர்ட் கேட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு என்ன விடை என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களில் ஒரு சில ஆண்டுகளில் முடிந்து விடுகின்றன. சில வழக்குகள் ஆண்டுக் கணக்கில் முடியாமல் நீடித்துக் கொண்டே செல்கின்றன. அப்படிப்பட்ட வழக்குகளில் ஒன்றுதான் 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்காகும்.ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு தொகுதிகளில் ஏன் போட்டியிட்டார் என்பது பற்றி ஒரு சிறிய விளக்கத்தைத் தருகிறேன்.

2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு, டான்சி நில பேர ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் 9&10&2000 அன்று  ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையை விதித்திருந்தது.  தனி நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறுத்திவைத்து,  தன்னைத் தேர்தலிலே போட்டியிட அனுமதிக்குமாறு மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மலைசுப்பிரமணியன் 11&4&2001 அன்று தள்ளுபடி செய்தார்.   தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் ஆலோசித்து, நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் டெல்லியில் கலந்து பேசிக் கொண்டிருந்த அதே நாளில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்து விட்டார். மேலும் அதற்கடுத்த நாளான 17&4&2001 அன்று ஆண்டிப்பட்டி தொகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான 23&4&2001 ஜெயலலிதா சார்பில் புதுக்கோட்டை தொகுதியிலும், புவனகிரி தொகுதியிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்பது நன்கு தெரியும். இருந்தாலும், நான்கு தொகுதிகளிலே அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக் காரணம், எப்படியும் தேர்தல் அதிகாரி தனது வேட்பு மனுவினைத் தள்ளுபடி செய்துவிடுவார் & மக்களிடம் சென்று தன்னைத் தேர்தலில் போட்டியிடாமல் செய்து விட்டார்கள் என்று பிரசாரம் செய்து, அதன் மூலம் மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்கலாம் என்று எண்ணி செயல்பட்டார்.இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒரு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று கோரி, தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் செ.குப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.   இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து, ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் அதிகாரிக்கு 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுதான் நீதிபதிகள் தத்து, சந்திரமௌலி பிரசாத் ஆகியோர் முன் 20&11&2012 அன்று விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது ஜெயலலிதா சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் லலித், நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தது சரியானதுதான், அவரது மூன்று வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

 இதைக் கருத்தில் கொண்டுதான் தேர்தல் அதிகாரி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் அதிகாரி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது தவறானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.குப்புசாமி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் அல்டாப் அகமது, சண்முகசுந்தரம் இரண்டு தொகுதிக்கு மேல் ஒருவர் போட்டியிடக் கூடாது என்று தெரிந்திருந்தும், உயர் பதவியில் இருப்பவர் நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானது,  எனவே ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்கள்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டம் கூறும்போது, ஏன் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்? முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? கட்சியின் தலைவராக இருப்பவர்,  பொது ஊழியராக இருக்கும் ஒருவர் இப்படி வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானது. இதுபோல செய்திருப்பது நியாயமா? சரியா? என்றெல்லாம் கேட்டதோடு வழக்கினை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.நமது வழக்கறிஞர் அல்டாப் அகமது மேலும் கூறும்போது, புவனகிரி தொகுதியில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், அவர் ஏற்கனவே ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது, மறைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மறைத்தது, தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஆறு ஆண்டு சிறை தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் செய்தியை வெளியிட்ட சில பத்திரிக்கைகள், இந்த தகவலை வெளிக்காட்ட தயங்கின. இறுதியாக, புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை, சென்னை உயர் நீதிமன்றம் முறையாகப் பரிசீலிக்காததால், அந்த அறிக்கைகளின்  அடிப்படையில், உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தக் குற்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதிப்பதற்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்கள். செ.குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த வழக்கிலே நமக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எழுந்துள்ள கேள்வியே; இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 20&11&2012 அன்று நீதிமன்றத்தில் கேட்டார்களே; Òதேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டம் கூறும்போது, ஏன் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்? முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? கட்சியின் தலைவராக இருப்பவர், பொது ஊழியராக இருக்கும் ஒருவர் இப்படி வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானதல்லவா? இது நியாயமா? சரியா?Ó என்பதுதான் கேள்வி! இந்தக் கேள்விக்கு என்ன விடை? இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
coupons for cialis printable blog.linglinzhu.com free discount prescription cards


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்