SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஜ்மல் கசாப் தூக்கு எதிரொலி : தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

2012-11-21@ 14:55:11

சென்னை: அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சிலர் மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மேல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பணியில் உளவுத்துறை போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அவர்கள் சந்தேக நபர்களின் செல்போன் பேச்சுகளை கவனித்து வருகின்றனர். நடமாட்டங்களையும் பின் தொடர்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் தங்கள் கட்டுக்குள் உள்ளதாகவும் எந்த அசம்பாவித சம்பவங்களுக்கும் வாய்ப்பு இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

rite aid load to card coupons link rite aid store products
plavix tonydyson.co.uk plavix plm
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்