SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்

2017-06-24@ 07:02:32

பொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை,  எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த மாணவருக்கு உள்ளதா  என்பது எல்லாவற்றையும்விட மிக முக்கியம். கணிதத்தைப் புரிந்துகொள்ள முடியாத  மாணவர்களை பொறியாளராக வற்புறுத்தக் கூடாது. இந்தக் கல்லூரியில்தான் படிப்பேன் என்று மாணவர்கள் அடம் பிடிப்பது தவறு. அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் நல்ல ேவலையில் உள்ளனர் எனவே, நீயும் அதையேதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தவும் கூடாது.

பொறியியல் படிப்பை தேர்ந்ெதடுக்கும் முன்னர் மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை முதலில் எடுக்க வேண்டும். அந்ததுறை குறித்து அலசி ஆராய்ந்து அது நமக்கு சரியாக இருக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் செல்கிறார்கள் என்பதற்காக ஒரு துறையை தேர்வு செய்யாமல் தனக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ, எந்த துறையில் அல்லது படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதோ அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல, பொறியியல் மாணவர்கள் படிப்பதற்கு ஒரே கல்லூரியை தேர்வு செய்யக்கூடாது. முதலில், தாங்கள் படிக்க விரும்பும் துறை உள்ள 5 கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்லூரிக்கும் ெசன்று அங்கிருக்கும் சீனியர் மாணவர்களை சந்தித்து கல்லூரியின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பின்னர், அதில் எந்த கல்லூரி சிறந்ததோ அந்த கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாணவர்களின் பொறியியல் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடுவது நல்லது. அதேபோல, வெளியூரில் இருந்து சென்னைக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் ஒருவருக்கு பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தால் உடனடி வேலை

அன்னம்மாள் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மின்ட், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் பெரம்பலூரில் கிளைகளை கொண்டுள்ளது.  செயல்முறை வகுப்புகள், உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.  ஸ்மார்ட் கிளாஸ்  மூலம் உயர் ரக கல்வியை, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு அளிக்கிறது. 10வது, 12வது பாஸ் / பெயில் மாணவர்களுக்கும் கட்டணச்சலுகை மட்டுமல்லாமல் ஊக்கத் தொகையுடன் “Star Hotel”களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு 6500 ரூபாய் மதிப்புள்ள Free Uniform, Note Books வழங்கப்படுகிறது. Carving Class, Spoken English மற்றும் Basic Bartending வகுப்புகளை இலவசமாக கட்டணமின்றி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் குறைந்த கட்டணத்தை சுலபத் தவணையாக EMI செலுத்தும் வசதி மற்றும் “Scholarship”ம் அளிக்கப்படுகின்றன. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் “Life Time Placements” அதாவது வாழ்நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த 7 வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி தன்னிடம் பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளிக்கிறது.

பொறியியல் கல்வி பயின்றால் தொழில் முனைவோராகலாம்

கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. B.E.,: CSE, ECE, EEE, MECH மற்றும் 7 முதுகலைப் பட்டபடிப்பு P.G., M.B.A. உள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்க முனைவோருக்கு கல்லூரிலேயே அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வழிவகை செய்து அதன்மூலம் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வளாகத்திலேயே கிடைக்க மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.சதன் எலெக்ட்ரானிக்ஸ் ெபங்களூரு கம்பெனியின் RFID ப்ராஜெக்ட், டிரீம்ஸ் அண்ட் டிசைன் சென்னை கம்பெனியின் Android Technology Project, மார்கெட்டிங் துறையில் Insight Onion நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பல சிறிய ஆராய்ச்சிகளை அனைத்து பொறியியல் துறைகளில் செய்து வருகிறது.

இந்த கல்லூரிக்கு “சிறந்த பொறியியல் கல்வி அளிக்கும் நிறுவனத்திற்கான விருதை” இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்ட் பல்கலைக்கழகமும், ராபர்ட் கோர்டன் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கி உள்ளது. கிராமங்கள் தத்தெடுப்பு, NSS, YRC மூலம் கண் சிகிச்சை முகாம்கள், ரத்ததான முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வருடந்தோறும் பங்கேற்றும் வருகிறது.

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கலாம்

இந்தியாவில் பல மாணவ, மாணவிகள் மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும், விமான ஓட்டிகளாகவும் ஆவதற்கு பெரிதும் விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக உலக தரத்திற்கு இணையான மேல்படிப்பை, குறைந்த செலவில் ரஷ்யாவிலுள்ள பல்வேறு மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ, வோல் கோகிராட், செயின்ட் பீட்டர்ஸ் பர்க், துவேர், கூர்ஸ்க், கஜான் போன்ற நகரங்களில் தரம் வாய்ந்த மிக உயர்ந்த மேற்படிப்பை தரும் மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட தரம்வாய்ந்த கல்வி நிலையங்கள் ஆகும்.

ரஷ்யாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் சேர பிளஸ் 2 வகுப்பில் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். பொறியியல் கல்விபெற பிளஸ் 2 வகுப்பில் 40% இருந்தால் சேரலாம். விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல் தொழில்நுட்பம், உயிர் வேதியியல் உள்ளிட்ட படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் அதகளவில் உள்ளன. ரஷ்ய மருத்துவ மற்றும் பொறியியல் பல்கலைக்ழகங்களில் பயில விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தை அனுகி விவரங்களை பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

 • 17-10-2019

  17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்