SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடியூரப்பாவால் ஆட்சிக்கு வரவில்லை : வெங்கய்யா நாயுடு ஆவேசம

2012-11-19@ 14:17:23

பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பாவின் தயவால் பாஜ ஆட்சிக்கு வரவில்லை, பாஜவின் கொள்கைளுக்கு தான் மக்கள் வாக்களித்தார்கள் என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நிலக்கரி சுரங்க ஊழல் காரணமாக முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா பாஜவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். டிசம்பர் 9ம் தேதி ஹவேரியில் புதிய கட்சி அறிவிப்பு தொடர்பாக பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். பொது கூட்டங்களில் பாஜ தலைவர் அத்வானி மற்றும் நிதின் கட்கரியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இருப்பினும் எடியூரப¢பாவை பாஜ தலைவர்கள் யாரும் இதுவரை விமர்சனம் செய்யாமல் இருந்தனர். முதல் முறையாக பாஜ தலைவர் வெங்கய்யா நாயுடு எடியூரப்பாவை விமர்சித்து பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் வெங்கய்யா நாயுடு அளித்த பேட்டி:  கர்நாடகவில் எடியூரப்பாவின் தயவால் பாஜ ஆட்சிக்கு வரவில்லை. பாஜவின் கொள்கைளுக்கு மக்கள் வாக்களித்தனர். கொள்கைகள் தான் மக்களுக்கு முக்கியம். கர்நாடக மக்களும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எடியூரப்பாவுக்கு பாஜ முழு ஆதரவு அளித்தது. அவர் புதிய கட்சி தொடங்க முடிவு செய்தால் அது அவர் விருப்பம். எடியூரப்பா பதவி இழந்ததற்கு அத்வானியையும், நிதின்கட்கரியையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறினார்.

sms spy app read spy apps free
walgreens promo read free pharmacy discount cards
venlafaxine forum mdwguide.com venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்