SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வரும் 30ம் தேதி நள்ளிரவு ஜிஎஸ்டி தொடக்க விழா

2017-06-20@ 05:13:32

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய அரங்கில், வரும் 30ம் தேதி நள்ளிரவு ஜிஎஸ்டி தொடக்க விழா கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக இது கருதப்படுகிறது. இதையொட்டி, வரும் 30ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அன்றிரவு 11 மணிக்கு தொடங்கும் விழா, நள்ளிரவு வரை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிஎஸ்டி அமலானதை உணர்த்தும் விதமாக, மணியோசை எழுப்பி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியவர். எனவே, பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அதேபோன்று நள்ளிரவு சமயத்தில் ஜிஎஸ்டி தொடக்க விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2017

    22-08-2017 இன்றயை சிறப்பு படங்கள்

  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்