SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் 1000 நாட்களை கடந்தது மங்கள்யான்

2017-06-20@ 05:11:41

பெங்களூரு: இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தனது ஆயிரமாவது புவி நாளை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது. இந்தியா கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஹரிகோட்டாவில் இருந்து மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மங்கள்யான் செயல்பாடு 6 மாதங்களுக்கு பின்னர் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக  கருதப்பட்டது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் தனது 1000மாவது புவி நாளை மங்கள்யான் நேற்று நிறைவு செய்தது.

செவ்வாய்கிரக நேரத்தின்படி 973.24 நாட்களை மங்கள்யான் நிறைவு செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதும் மங்கள்யான் நல்ல நிலையில் உள்ளதாகவும், அதில் இன்னமும் எரிபொருள் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் மேலும் ஓராண்டுக்கு அதில் இருந்து தகவல்களை பெற முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மங்கள்யான் அனுப்பும் புகைப்படங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

  • punecskfansipl

    ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

  • kanjipuramuthiram

    பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா

  • commonwealthwinners

    காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்