SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசாகப்பட்டினத்தில் பரபரப்பு சார் பதிவாளர் அலுவலக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

2017-06-20@ 03:52:16

திருமலை: விசாகப்பட்டினத்தில் சார் பதிவாளர் அலுவலக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தங்கம், வெள்ளி மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வெங்கையா நாயுடு. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து விசாகப்பட்டினம், வடலப்புடி, வெங்கடேஸ்வரா காலனியில் உள்ள அவரது வீடு, மற்றும் குண்டூர், விஜயவாடா, திருப்பதி ரிசர்வாயர் சாலையில் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் 10 குழுக்களாக பிரிந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

கூடுதல் டிஜிபி தாக்கூர், உத்தரவின்பேரில் நடந்த சோதனையில், 1 கிலோ தங்கம், 1 கிலோ வெள்ளி, சொகுசு கார் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதால் மேலும் பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மற்ற அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்