SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 பேர் கும்பல் அட்டூழியம் பீகார் மாணவி பலாத்காரம் சிறப்பு படை விசாரணை: ஒருவர் கைது

2017-06-20@ 03:51:12

லகிசராய்: பீகார் மாநிலத்தில் 6 பேர் கும்பலால் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிறப்பு படை விசாரணை மேற்கொண்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் லகோசாக் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இயற்கை உபாதையை கழிக்க வீட்டைவிட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பான்சிபூர் ரயில் நிலையம் அருகே கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. பின்னர் பயணிகள் ரயிலில் மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிய அந்த கும்பல் கியூல் ரயில்நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.

மறுநாள் காலை மாணவியை தேடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவி ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பலாத்கார சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தார். சிறப்பு விசாரணை குழு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் 6 பேரில் இரண்டு பேர் பற்றிய தகவலை தெரிவித்தார். அதை தொடர்ந்து மாணவியின் சொந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

  • road_safetyr

    சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்