SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரியாவில் தற்கொலைப்படையினர் தாக்குதலில் 16 பேர் பலி

2017-06-20@ 01:34:07

மைடுகுரி: நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.  நைஜீரியாவின், போர்னோ மாநில தலைநகர் மைதுகுரியில், கோபா கிராமத்தில் உள்ள டலோரி முகாமில், போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீடுகளை இழந்தவர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தேசிய அவசரக்கால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் அப்துல் கதிர் கூறுகையில், “டலோரி முகாமிற்குள் தற்கொலைப்படையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நுழைய முயன்றனர். ஆனால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தற்கொலைப்படையை சேர்ந்த வேறு இரண்டு பெண்கள் குண்டுகளை வெடிக்க வைத்து முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 16 பேர் பலியானார்கள்” என்றார். கடந்த 8ம் தேதி மைதுகுரியில் உள்ள ஜிட்டாரி போலோ பகுதியில் தற்கொலைப்படை  தாக்குதலில் 11 பேர் பலியாகினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X