SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி: சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் கொட்டி தீர்த்தது கனமழை

2017-06-20@ 01:31:13

சென்னை: சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்து 20 நாட்கள் ஆன பின்பும், தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்ததால் வெப்பம் தாங்காமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வெப்பச் சலனத்தால் திடீரென மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், போரூர், அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 20 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை மட்டும் 0.8 மி.மீ மழை சென்னையில் பதிவானது.

இதற்கிடையில், ஆந்திராவை ஒட்டியுள்ள கடல்பகுதியின் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் நேற்றிரவு மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 4 மணி அளவில் மந்தைவெளி, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 15 நிமிடம் கனமழை பெய்தது.தொடர்ந்து, இரவு 7 மணி அளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் இரவு 7.10 மணிக்கு தொடங்கிய மழை 8.30 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. சென்னை, காஞ்சி, திருவள்ளூரிலும் நேற்றிரவு மழை கொட்டித் தீர்த்தது. கடும் வறட்சிக்கு நடுவே பெய்த இந்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடிய, விடிய இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனம்பாக்கம்: சென்னையில் நேற்று மாலை பெய்த கன மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து வந்த விமானம் 119 பயணிகளுடன் இரவு 7.10 மணிக்கு சென்னை வந்தது. மழை, காற்றால் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பின. அதேபோல், ஐதராபாத், பெங்களூரு, திருச்சி, கொச்சி, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து வந்த மேலும் 5 விமானங்கள் தரையிறங்க  முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்துக்கொண்டிருந்தன. இதுபோல, சென்னையில் இருந்து மதுரை, பெங்களூரு, கொச்சி, டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்கள் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் வரை கால தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2017

  24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • starYRROSUSW

  சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

 • TripleTALAQ

  மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

 • phiLDAYAVill42padukaYAM

  ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

 • tHREEboyresucedITALY

  பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்