SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்வு செய்தவர்களில் பலர் ஆப்சென்ட் ஆனதால் 25% ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இன்று மீண்டும் குழந்தைகள் சேர்க்கை

2017-06-20@ 01:29:57

சென்னை: சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1)  (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில்  25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்  நலிவடைந்த  பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி 31.5.17 அன்று அனைத்துப் பள்ளிகளிலும் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒருசிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால் நிலுவையாக உள்ள காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 20ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதி முன்னிலையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

எனவே, ஏற்கனவே இணைய வழியாக விண்ணப்பித்துச் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 79,842 பேர் விண்ணப்பித்திருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்படும் பள்ளிகளில் கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலைளில் குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த 31ம் தேதி தனியார் பள்ளிகளில் குலுக்கல் நடந்தது. ஆனால், பல பள்ளிகளில் விதியை மீறி விண்ணப்பித்த பெற்றோர்களை அனுமதிக்காமல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து குலுக்குல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வனிடம் கேட்டபோது, ‘ஏழை குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் முறைகேட்ைட நீங்கள் கூறுவதுபோன்ற புகார் இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. குறிப்பிட்ட பள்ளிகள் மீது புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்