SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் ஆராய்ச்சி மையம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-06-20@ 01:28:22

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார். அதைதொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழ்நாடு மாநில திட்டக்குழு 12-5-2015 அன்று வண்ண மீன் வானவில் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்று பரிந்துரை செய்தது. அதன் பிறகு, 29-3-2015 அன்று அன்றைய முதல்வரால் இந்த திட்டம் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு 30 மாதங்கள் முடிந்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட வண்ண மீன் விற்பனை செய்யும் கடைகள்  இருந்தாலும், கொளத்தூரில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகையான வண்ண மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம், கொளத்தூரில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தினந்தோறும் மொத்தமாகவும், சில்லரையாகவும் ரூ.30 லட்சம் மதிப்பிலான வண்ண மீன்கள் உள்ளூரிலும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னையை சுற்றியுள்ள லட்சுமிபுரம், காவாங்கரை, சோத்துப்பாக்கம், செங்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளிலும், மதுரை, தூத்துக்குடி, ஊத்துக்கோட்டை, ஆத்தூர், தேவம்பேடு ஆகிய இடங்களில் வண்ண மீன் வளர்ப்புக் குட்டைகள் உள்ளன. கொளத்தூர்தான் இந்தியாவின் வண்ண மீன் வளர்ப்புக்கு தாயாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், கொளத்தூர் தொகுதியில் நிலத்தடி நீரின் தன்மை வண்ண மீன்கள் வாழ ஏதுவாக அமைந்திருக்கிறது. அதனால்தான் இந்த தொழில் கொளத்தூரில் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே, வண்ண மீன் வளர்க்கும் சிறுதொழில் மேலும் வளர்ச்சியடைய, அந்தப் பகுதியில் வண்ண மீன் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மீன்களின் உணவான இயற்கை தீவனங்கள் கிடைப்பதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலை நாடுகளில் வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கு மீன் உணவுக்கான இடங்களை அமைத்து தருவதோடு, ஆராய்ச்சி மையங்களும் ஏற்படுத்தி தந்து, போதிய மானியங்களையும் வழங்குகின்றனர். அதேபோல, நம்முடைய மாநிலத்தில் அதிகளவு மீன் உற்பத்தி செய்யக்கூடிய, விற்பனை நடக்கக்கூடிய இடங்களுக்கு அருகாமையில் மீன்களுக்கு இயற்கை தீவனம் கிடைக்கக்கூடிய வழி வகைகளை செய்ய வேண்டும். 15-7-2015 அன்று மாதவரத்தில் வண்ண மீன் குஞ்சுகள் பொரிப்பகம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த நோக்கத்துக்காக திறக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமலே இருக்கிறது. இப்போது கொளத்தூரில் இருந்துதான் மீன் குஞ்சுகளைப் பெற்று வருவதாக அறிகிறேன்.

வண்ண மீன்  தொழில்முனைவோருக்கு மீன் வள வாரியத்தில் உறுப்பினர் அட்டைகள் வழங்கியதோடு, வண்ண மீன் உற்பத்தியாளர்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சி காலத்தில்தான். ஆனால், அந்த மானிய விலை மின்சாரம் தடைபட்டிருக்கிறது. மீண்டும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். வண்ண மீன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வண்ண மீன் ஏற்றுமதி மையமும், வண்ண மீன்கள் வளர்ப்புக்கு தனி வாரியத்தையும் இந்த அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ஜெயக்குமார்: மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் ரூ.10.30 கோடி அரசு நிதியுதவியுடன் வண்ணமீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. கொளத்தூர் தொகுதியில் நிலம் இருந்தால் வண்ண மீன் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indiaBLADEREMONCAL

  இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

 • cave_1_southh

  நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

 • 29-06-2017

  29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • mIMANGAIhaecvsayrainhuhfd

  தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

 • sBARAmailOPENERelppMHNMDK

  சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்