SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் டே கொண்டாடிய விவகாரம்; மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு: தடையை மீறினால் நடவடிக்கை

2017-06-20@ 01:25:52

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பஸ் டே கொண்டாடிய மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தின் போது பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறும், மேலும் பல இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதலும் ஏற்பட்டது. அதைதொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடரப்பட்டது.
அந்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பஸ் டேவுக்கு தடை இருந்தாலும் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தடையை மீறி பஸ் டே கொண்டாடி வருகின்றனர். மேலும், சென்னை மாநகர போலீசும் பஸ் டே கொண்டாட தடை விதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி சென்னையில் பல இடங்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் தடையை மீறி பஸ் டே கொண்டாடினர். குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் 27 பி தடம் எண் கொண்ட மாநகர பஸ்சை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் இருந்து பாரதி சாலை வரும் போது வழிமறித்து திடீரென மாநில கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினர். அப்போது, பாதுகாப்பற்ற முறையில் பயணித்தபடி பயணிகளை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி பஸ்சின் மேற்கூரையையும், பக்கவாட்டு பகுதியையும் கைகளால் தட்டி கலாட்டா செய்து, பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதை பார்த்த மாணவர்கள்  நாலா புறமும் சிதறி ஓடினர். இச்சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மூன்று கல்லூரி மாணவர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். பின்னர் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில், ஜாம்பஜார் காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு கொடுத்த புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய மாநில கல்லூரி மாணவகள் 6 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நேற்று கல்லூரி மாணவர்கள் மீண்டும் பஸ் டே கொண்டாட திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி என சென்னை முழுவதும் உள்ள கல்லூரிகள் முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கல்லூரி அருகே உள்ள பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் பஸ் டே கொண்டாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்