மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை

2017-06-20@ 01:24:23

திருவொற்றியூர்: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் என்ற மத்திய அரசு நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பராமரிப்பு, உற்பத்தி, விரிவாக்கம் மற்றும் அலுவலகப் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, உணவகம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
பலமுறை கோரிக்கை விடுத்தும், தொழிற்சாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வை கடந்த 6 மாதங்களாக சிபிசிஎல் நிர்வாகம் அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சிபிசிஎல் நிறுவன வாசலில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அசோசியேஷன் தலைவர் பிராங்க்ளின் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இதில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கண்டன கோஷமிட்டனர். பின்னர், ஒப்பந்த தொழிலாளர்கள் சிபிசிஎல் நிறுவனத்துக்குள் செல்லாமல் பணியை புறக்கணித்தனர். இப்போராட்டத்தின் காரணமாக தொழிற்சாலையில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
ராஜீவ் கொலை வழக்கு: நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
குட்கா விவகாரம் : டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக கோரி ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் பேரணி
ஓ.பி.எஸ், பாண்டியராஜன் உட்பட 11 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது
குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை : தமிழக முதல்வருடன் டிஜிபி திடீர் சந்திப்பு
பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தவே சிபிஐ விசாரணை : குட்கா வழக்கு தீர்ப்பு முழு விபரம்
கூடுதல் நீட் தேர்வு மையம் ... சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!
தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்
கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு
27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
கர்நாடக தேர்தலுக்காக வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிப்போடுகிறது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
12:07
காவிரி தீர்ப்பை பாழும் கிணற்றில் தள்ள பா.ஜ.க. அரசு நினைக்கிறது : பாலகிருஷ்ணன் கண்டனம்
12:06
தமிழகத்துக்கு துரோகம் செய்ய மத்திய அரசு சத்தியம் செய்துவிட்டது : துரைமுருகன்
12:05
காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம்
12:00
நிர்மலா தேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகன் வீ்ட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
12:00
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதிப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
11:54