SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலந்தாய்வில் சீட் கிடைக்காதவர்கள் வேளாண்மை பல்கலைக்கழக டீன் அலுவலகத்தில் முற்றுகை

2017-06-20@ 01:00:22

கோவை : கோவை வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வில் சீட் கிடைக்காதவர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 2017-18ம் கல்வியாண்டில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 13 பட்டப்படிப்புகளில் 2,840 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர மாணவர்கள் 21,015 பேர், மாணவிகள் 28,014 பேர் மற்றும் திருநங்கை ஒருவர் என மொத்தம் 49,030 பேர் விண்ணப்பித்தனர். சிறப்பு பிாிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் காலியாக இருந்த 32 இடங்களும் நிரப்பப்பட்டன.  

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக நேற்று துவங்கியது. துணைவேந்தர் ராமசாமி துவக்கிவைத்தார். 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று ஆறு பேர் முதலிடம் பிடித்தனர்.  இதில் 3 பேர் பங்கேற்கவில்லை. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா, சாக்‌ஷினி மற்றும் கோவையைச் சேர்ந்த கீர்த்தனா ஆகிய மூன்று பேர் 200 கட்-ஆப் மதிப்பெண்களுடன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் பட்டப்படிப்பை தேர்வு செய்தனர். 198 கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோவை வேளாண் பல்கலையில் சீட் கிடைக்கவில்லை எனக்கூறி சுமார் 30 பேர் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்