SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய வீடியோ விவகாரம் சபாநாயகர், தலைமை செயலாளர் விசாரிக்க கவர்னர் உத்தரவு : மு.க.ஸ்டாலின் மனு மீது நடவடிக்கை

2017-06-20@ 00:21:54

சென்னை : அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசிய வீடியோ வெளியான விவாகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர், தலைமை செயலாளருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகள் செயல்பட்டன. ஓபிஎஸ் பதவி விலகிய பிறகு அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது பண பேரம் நடந்ததாக அங்கிருந்து தப்பி வந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ சரவணன் தெரிவித்ததாக வீடியோ வெளியானது. இதுதொடர்பாக கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து திமுக செயல்தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தமிழக கவர்னரின் முதன்மை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: ஜூன் 17ம் தேதி மாலை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் சரவணன், கனகராஜிடம் இரு தனியார் தொலைக்காட்சிகள் ‘‘ஸ்டிங் ஆபரேசன்’’ நடத்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சிடிக்கள் மற்றும் மனுவை கவர்னரிடம் ஸ்டாலின் அளித்தார்.

இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும், சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அதே நேரத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவினர் அல்லது அமலாக்கத்துறையினர் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவில், சட்டம், விதிகள் மீறபட்டுள்ளதால் பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்ெகடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் சிபிஐ, வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.மு.க.ஸ்டாலின் மனுவில் கூறியுள்ள மூன்று கோரிக்கைகள் தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கவர்னரின் உத்தரவுப்படி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனு, சிடியின் நகல் சபாநாயகர், தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்