SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாரா? இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் சவால்

2017-06-19@ 21:21:20

நெல்லை: அதிமுக ஓபிஎஸ் அணி நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக வளர்த்தனர். எந்த ஒரு குடும்பத்தின் கையிலும் அதிமுக சிக்கி விடக்கூடாது என அவர்கள் நினைத்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாரையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கி வைத்தாரோ அவர்கள் பிடியில் தற்போது கட்சி சிக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும்.

அம்மா உணவகத்தில் உணவு தரமாக இல்லை. உணவகம் சரியாக இயக்கப்படவில்லை. அம்மா குடிநீர் தாராளமாக கிடைப்பதில்லை. தமிழகத்தில் இன்று எந்தவொரு பிரச்னையும் அதுவாக தீர்ந்தால் உண்டு. தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்களும் நம் பக்கம் இருக்க, வெறும் 122 எம்எல்ஏக்களை மட்டும் வைத்து கொண்டு இந்த ஆட்சி நடக்கிறது. எடப்பாடி அரசுக்கு தைரியமிருந்தால் உள்ளாட்சி தேர்தலை அறிவித்து நடத்தட்டும். தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் நமது அணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

  • PeruBUsCrash44dead

    பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

  • Amritsarpm

    அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் குடும்பத்துடன் வழிபாடு

  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X