SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்எல்ஏக்கள் பேரம் பேசிய விவகாரம்: ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு

2017-06-19@ 21:11:31

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர், தலைமை செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆளுங்கட்சி இரண்டு அணிகளாக உடைந்தது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் விசாரணைக்கு டெல்லி சென்றார். இதையடுத்து அவருடனும் சசிகலா குடும்பத்துடனும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவதில்லை என சசிகலா அணி எம்எல்ஏக்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஜாமீன் பெற்று சென்னை வந்த டிடிவி.தினகரன் மீண்டும் கட்சிப்பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அவருக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆளுங்கட்சி 3 அணிகளாக செயல்பட துவங்கியது. இந்நிலையில் 2 அதிமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சசிகலா அணி எம்எல்ஏக்களுக்கு தலா 3 கோடியும் பன்னீர் அணி எம்எல்ஏக்களுக்கு ரூ.2 கோடியும் வழங்கப்பட்டதாக கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ, தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் இப்பிரச்சனையை எழுப்பி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வீடியோ சிடியை கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்காததால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே எம்எல்ஏக்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்தித்து மு.க.ஸ்டாலின் முறையிட்டார்.

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்ததாக ஸ்டாலின் தெரிவித்தார். ஆளும் தகுதியை எடப்பாடி அரசு இழந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனிடையே ஸ்டாலின் கொடுத்த்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர், தலைமை செயலாளருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். ஸ்டாலின் புகார் மனுவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தலைமைச்செயலாளருக்கும் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் வித்தியாசகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SmokingVolcano

  புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

 • 20-02-2018

  20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thashwanth_thookku11

  தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

 • kolkata_del_indhia

  அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

 • haidiZ_market11

  ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X