SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்ட மாணவர் தற்ெகாலை காதலிக்கு தீவிர சிகிச்சை: சாதி பிரச்னை காரணமா?

2017-06-19@ 19:34:57

திருச்சி: திருச்சி பொன்மலை ஜி கார்னர் அருகே மாநகராட்சி மாடுவதைக்கூடம் மற்றும் கல்லறை தோட்டம் உள்ளது. இன்று காலை இங்கு தொழிலாளர்கள் வந்தபோது ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அந்த ரோட்டில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தனர். அருகில் ஒரு பைக்கும் நிறுத்தப்பட்டு இருந்தது. கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். வாலிபர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அந்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்தவரின் செல்போன் மற்றும் ஐடி கார்டு மூலம் போலீசார் துப்பு துலக்கியதில் இறந்த வாலிபர்,  ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரகாஷ்(21), திருச்சி சட்டகல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர் என்று தெரியவந்தது. சுப்பிரமணி வக்கீல் குமாஸ்தாவாக வேலை செய்கிறார். அந்த பெண், பிரகாஷின் காதலி ஈரோடு சத்திரத்தை சேர்ந்த பாலசந்தர் மகள் அட்சயா. பிளஸ் 1 படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு சாதி பிரச்னை காரணமாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று காதலி அட்சயா திருச்சி வந்துள்ளார். இருவரும் பைக்கில் பல இடங்களுக்கு சென்று விட்டு பூச்சிமருந்தை வாங்கி வந்து குடித்து உள்ளனர். இதில் பிரகாஷ் இறந்து விட்டார்.

பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் வந்து பார்த்தனர். நேற்றுபிரகாஷ் தனது நண்பர்களிடம் போனில் பல முறை பேசி உள்ளார். காதலி வந்திருக்கிறாள். நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என கூறி உள்ளார். நண்பர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரவு 8 மணிக்கு மேல் அவரை போனில் தொடர்பு கொண்டபோது அவர் கிடைக்கவில்லை. எனவே 8 மணிக்கு மேல் தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என தெரிகிறது. இதுகுறித்து இருதரப்புபெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்த பிறகு தான் தற்கொலைக்கான முழு காரணம் தெரியவரும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்