SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’

2017-06-19@ 18:57:36

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய ‘கல்யாண ராணி’யை மணமேடையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பந்தளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பார்த்துள்ளார். தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர்முனையில் ஷாலினி பேசினார். அப்போது தான் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். விரைவில் கேரள உயர்நீதிமன்றத்தில் வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தனக்கு இது 2வது திருமணம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து உள்ளனர்.

பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது ஷாலினி தனக்கு பெரிய அளவில் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. ஆகவே திருமணத்திற்கு ஒரு சிலர் மட்டுமே வருவர் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை பந்தளம் அருகே ஒரு கோயிலில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டு இருந்தன. மணமக்களின் நெருங்கிய உறவினர்களும் அங்கு திரண்டு இருந்தனர். அதைத் தொடர்ந்து மணப்பெண் அலங்காரத்தில் ஷாலினி நேற்று காலை கோயிலுக்கு வந்தார். திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் களைகட்டி காணப்பட்டது. கூட்டமும் அதிகமாக இருந்தது. திருமண கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஷாலினியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மணக்கோலத்தில் வருவது தனது நண்பர் ஒருவரின் மனைவி போல இருக்கிறதே? என்று சந்தேகம் அடைந்தார்.

உடனே, செல்போனில் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்தார். அதிர்ச்சி அடைந்த நண்பரும் கோயிலுக்கு விரைந்து வந்தார். மணக்கோலத்தில் ஷாலினி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாலிபரை பார்த்த உடன் ஷாலினியும் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதைத் தொடர்ந்து மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேசினார். தன்னை ஷாலினி திருமணம் செய்து ஏமாற்றியதை கூறினார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து  பந்தளம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில் ஷாலினி திருமண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பணம், நகைக்கு ஆசைபட்டு இதுவரை 10 பேரை ஷாலினி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். ஆரன்முளா, செங்கனூர் ஆகிய காவல் நிலையங்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சொகுசாக வாழ ஆசை

கல்யாண ராணி ஷாலினிக்கு ஒரு குழந்தை உள்ளது. சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்துள்ளது. ஆகவே பணம் சம்பாதிக்க இந்த வழியை கையாண்டுள்ளார். ‘மணமகன் தேவை’ என்ற விளம்பரம் கொடுத்துதான் பல ஆண்களையும் தனது வலையில் விழ வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகி விடுவதை அவர் வாடிக்கையாக கொண்டு இருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • WorldPressPhoto2018

  உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

 • PeruBUsCrash44dead

  பெரு நாட்டில் 300 அடி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

 • Amritsarpm

  அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் குடும்பத்துடன் வழிபாடு

 • 22-02-2018

  22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • GodofWealth

  சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X