SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம்

2017-06-19@ 17:31:59

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா ஒரு மனதாக ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி மசோதாவை ஒத்திவைக்க திமுக கோரியது. ஜி.எஸ்.டி மசோதாவை செலக்ட் குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக கேட்டுக்கொண்டது.  ஆனால் திமுக எதிர்ப்பை மீறி தமிழக சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எதிர்ப்பை மீறி ஜி.எஸ்.டி மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  சட்டப்பேரவையில் வணிகவரித்துறை தொழில் அமைப்புகள், வியாபாரிகளிடம் அரசு கருத்து கேட்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை பேரவையில் திமுக எடுத்து கூறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குதிரை பேரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-12-2017

    17-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_well_fare

    மோடியின் மிசோரம், மேகாலயா பயணம்: பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு

  • delhiamarsolidiers

    இந்தியா-பாகிஸ்தான் போரின் 46வது வெற்றி தினத்தையொட்டி அமர் ஜவான் ஜோதியில் ராணுவ வீரர்கள் மரியாதை

  • RahulGandhitakecharge

    காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி: தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

  • panipolivu_11

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு :வாட்டி வதைக்கும் குளிரை தணிக்க தீமூட்டி குளிர்காயும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்