SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏன் தாகம் ஏற்படுகிறது ?

2017-06-19@ 10:26:58

வெயிலில் அலைந்தாலும், உடற்பயிற்சி செய்த பிறகும் நமது தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. ஆனால் நமக்கு தண்ணீர் தாகம் எடுப்பதற்கான உண்மையான காரணம் தெரியுமா...? நமது உடலிலுள்ள ரத்தத்தில் தண்ணீரும் உப்பும் கலந்துள்ளது. சாதாரண நிலையில் ரத்தத்தில் உள்ள உப்பு மற்றும் தண்ணீரின் விகிதம் சமநிலையில் இருக்கும். ரத்தத்தில் உள்ள தண்ணீரின் அளவு குறையும் போது உப்பு அதிகமாகிறது. இவ்வேளையில் நமது மூளையில் அமைந்துள்ள தாகத்தை உண்டாக்கும் மையமானது, நமது தொண்டையை சுருங்க செய்து நாம் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது.

இதுதவிர நமது உமிழ்நீர் சுரப்பி சரியாக சுரந்தும் நமது ரத்தத்தில் தண்ணீர் சரியாக அமைந்திருந்தும் சில நேரம் நமக்கு அதிக தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. உதாரணமாக மது அருந்தும் போது ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. எனவே தண்ணீரின் விகிதம் குறைந்துவிடும். அந்த நேரத்திலும் நமது மூளையானது நாம் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியத்தை தொண்டைக்கு சுட்டிக்காட்டுகிறது. எனவே நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்