SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டி... வரலாறும், எதிர்காலமும்

2017-06-18@ 01:14:00

ஜிஎஸ்டி வரலாறு

ஜிஎஸ்டி வரிமுறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு  பிரான்ஸ். அங்கு 1954ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு 1980ம் ஆண்டின் இறுதியில் கனடா நாட்டில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அங்கு  எம்எஸ்டி( உற்பத்தியாளர்ளுக்கான விற்பனை வரி) முறைக்கு பதிலாக மதிப்பு கூட்டு  வரியை(வாட்) நடைமுறைபடுத்தி அதனை  ஜிஎஸ்டி என்றழைத்தனர். உலகில் தாராளமயம் வேகம் எடுத்தப்பிறகு ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தன. இப்போது ஆஸ்திரேலியோ உட்பட 150 நாடுகளில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

இந்தியாவில் வந்த கதை: இந்தியாவில் 1990களில்  தொடக்கத்தில் இருந்து ஜிஎஸ்டி குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அமரேஷ் பக்‌ஷி என்ற பொருளாதார நிபுணர் 1994ம் ஆண்டு மதிப்பு கூட்டு வரி(வாட்) முறையை அறிமுகப்படுத்துவதின் மூலம் ஜிஎஸ்டியை அமல்படுத்தலாம்  என்ற ஆலோசனையை வெளிப்படுத்தினார். இதற்கு முன்னோட்டமாக வல்லுநர் அசிம்தாஸ் குப்தா மேற்கொண்ட ஆய்வில்   வாட் வரியை அமல்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோல் கேல்கர் குழு, நிதிக்குழு உட்பட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்  வாட் வரி அமல்படுத்தப்பட்டது.

அந்த  வரிமுறை  வெற்றிகரமாக அமல்படுத்தியதை தொடர்ந்து ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அழுத்தம் தந்தனர். அதனால் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதில் தீ்விரம் காட்டியது. அதன்பிறகு 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு முறையாக அறிவித்தது.

ஜிஎஸ்டி - ஒரே வரி: மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் வரிமுறையை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிமுறையை அமல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதுதான் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி(கூட்ஸ் அண்டு சர்வீசஸ் டாக்ஸ்). அதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை சந்தைக்கு விற்பனை செய்வது வரை உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, நுழைவு வரி, கலால் வரி என பல்வேறு வகையான வரிகள் செலுத்த வேண்டி உள்ளது.

 இந்த வரிமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதேபோல் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சரக்குகள் கொண்டுச் செல்லும் போது செலுத்த வேண்டிய வரிகள் தனி.  இவை தவிர வரி அடிப்படையில் கல்வி , தூய்மை, விவசாயிநலன், சேவைக் கட்டணம் என வசூலிக்கப்படும் வரிக்கு வரிகள் தனி. இதையெல்லாம் தவிர்த்து எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு வரி மட்டும்தான். அதுதான் ஜிஎஸ்டி.

என்ன பயன்

பல்வேறு கட்டங்களில் செலுத்தப்படும் விதவிதமான வரிகள் அனைத்தும் கடைசியில் பொருட்களை வாங்கும் பொதுமக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது. ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆங்காங்கே செலுத்த வேண்டிய விதவிதமான வரிகள், அதற்கான அலைச்சல்கள் குறையும்.

 அந்த வரிகளை பொருட்களின் விலையில் கூட்டுவதால் சந்தையில் பொருட்களின் விலை குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது.   அதனால் புதிய வரிமுறை நுகர்வோர்களான பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஒவ்வொரு வரிக்கும் தனி அலுவலகம், அவற்றுக்கென தனித்தனியாக ஊழியர்கள், அலுவலர்கள் என அரசுகளுக்கான செலவுகள் குறையும். வியாபாரிகள் மாநில நுழைவு வரிகளை சமாளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்குளை திறந்த சிரமங்கள் இனி குறையலாம். உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பரிமாற்ற செலவுகள் குறைவதால் தொழிலை பெருக்குவதற்கும், தொழில்போட்டியை ஊக்குவிக்கவும் ஜிஎஸ்டி வரிமுறை உதவலாம்.

இணைக்கப்படும் வரிகள்

மத்திய அரசு இதுவரை வசூலித்து வந்த மத்திய கலால் வரி, கூடுதல் கலால் வரி, சேவை வரி, கூடுதல் சுங்கத்தீர்வை,  சிறப்பு கூடுதல் சுங்கத்தீர்வை ஆகியவை ஒன்றிணைக்கப்படும். அதேபோல் மாநில அரசு வசூலிக்கும் மாநில மதிப்புக் கூட்டப்பட்ட வரி அல்லது விற்பனை வரி,  பொழுதுபோக்கு வரி(உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வரிகள் தவி்ர), மத்திய அரசு விதித்து மாநில அரசு வசூலிக்கும் மத்திய விற்பனை வரி, நுழைவு வரி, நகர சுங்கவரி, ெகாள்முதல் வரி, ஆடம்பர வரி, லாட்டரி- சூதாட்டங்களுக்கான வரி ஆகியவையும் ஒன்றிணைக்கப்படும்.

வரி விகிதங்கள்

ஜிஎஸ்டி வரி பொருட்களுக்கு ஏற்ப 4 விதமாக  வசூலிக்கப்படும். அதன்படி  மொத்தம் 1200க்கும் அதிகமான பொருட்களுக்கு 5, 12, 18, 28 சதவீதம் என 4 பிரிவுகளில் வரி விதிக்கப்பட்டுள்ளன.  ஆட்டோ மொபைல் பொருட்களுக்கு 28 சதவீதமும்,  கேமரா, தேனிரும்பு பொருட்கள் , இயற்கை குடிநீர் போன்றவற்றிற்கான  வரி 18 சதவீதமாகவும், விலங்குகளின் கொழுப்பு நூடுல்ஸ், ஊறுகாய், சூப் போன்றவற்றிற்கு 12 சதவீதமாகவும்,  அகர்பத்தி, இன்சூலின் போன்றவற்றிற்கான வரி 5 சதவீமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர சில காய்கறிகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரி ஏதும் கிடையாது.

வரி ஏய்ப்பு குறையும்

ஜிஎஸ்டி வரிமுறையில் அனைத்து வரி செலுத்துவது, செலவின விவரங்களை தாக்கல் செய்வது என எல்லா நடைமுறைகளும் ஆன்லைனில் இருக்கும் என்பதால் வரி செலுத்துவது எளிதாக  இருக்கும். வரவுச் செலவு முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் என்பதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இருக்காது என்று மத்திய அரசு நம்புகிறது. அதுமட்டுமின்றி  பங்க் கடை வைத்திருப்பவர்களிடமிருந்தும் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும். அரசின் வரி வருவாய் உயரும்.  பண பயன்பாடு குறைந்து காசோலை, டெபிட் கார்டு, ஆன்லைன் பரிமாற்றம் மூலம் வரி செலுத்துவது மட்டும் அமலில் இருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்