SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா 521 ரன் குவித்து டிக்ளேர

2012-11-17@ 01:41:17

அகமதாபாத் : இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இளம் வீரர் புஜாரா இரட்டை சதம் விளாசி அசத்தினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்துள்ளது. அகமதாபாத், சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன் எடுத்திருந்தது. சேவக் அதிரடியாக 117 ரன் விளாசி ஆட்டமிழந்தார். புஜாரா 98 ரன் (181 பந்து, 13 பவுண்டரி), யுவராஜ் 24 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார் புஜாரா.

மறு முனையில் யுவராஜ் 11வது அரை சதம் அடித்தார். புஜாரா , யுவராஜ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தது. யுவராஜ் 74 ரன் எடுத்து (151 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) சமித் சுழலில் ஸ்வான் வசம் பிடிப்பட்டார். அடுத்து வந்த கேப்டன் டோனி 5 ரன் மட்டுமே எடுத்து ஸ்வான் சுழலில் பலியானார். அஷ்வின் பொறுமையாக கம்பெனி கொடுக்க புஜாரா இரட்டை சதம் விளாசினார். அஷ்வின் 23, ஜாகீர் 7 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 521 ரன் எடுத்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா 206 ரன் (389 பந்து, 21 பவுண்டரி), ஓஜா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்வான் 5, ஆண்டர்சன், சமித் பட்டேல், பீட்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் அலஸ்டர் குக், காம்ப்டன் களமிறங்கினர்.

முதல் ஓவரையே சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை வீச வைத்து இங்கிலாந்து வீரர்களுக்கு மனரீதியான அச்சுறுத்தலைக் கொடுத்தார் டோனி. ஓரளவுக்கு சமாளித்து விளையாடிய குக் , காம்ப்டன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.2 ஓவரில் 26 ரன் சேர்த்தது. காம்ப்டன் 9 ரன் எடுத்து அஷ்வினின் மந்திர சுழலில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். ஆண்டர்சன் 2 ரன் மட்டுமே எடுத்து ஓஜா சுழலில் கம்பீர் வசம் பிடிபட்டார். டிராட் ரன் ஏதும் எடுக்காத நிலையில் அஷ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்ததால் இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன் எடுத்து திணறி வருகிறது. குக் 22 ரன், பீட்டர்சன் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று நடக்கும் 3வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்டி பாலோ ஆன் நெருக்கடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும்.

cialis cvs coupon cialis cialis 20mg
how do abortion pill work pristineschool.com misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்