SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை

2017-06-13@ 21:40:56

புதுக்கோட்டை: செக்ஸ் டார்ச்சர் காரணமாக பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை கவிநாடு மேற்கு சண்முகா நகரை சேர்ந்தவர் மதிவாணன் (45).  ஆலங்குடி அருகே தெற்கு ராயப்பட்டி ஆரம்ப தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், புதுக்கோட்டை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இவருடன் அதே பகுதி காமராஜபுரம் 25ம் வீதியை சேர்ந்த வீராச்சாமி மனைவி புவனேஸ்வரி (35) ஆசிரியராக வேலைப் பார்த்து வந்தார்.

புவனேஸ்வரிக்கு, மதிவாணன் பள்ளியிலும் தொலைபேசி மூலமாகவும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த 7.5.2015ம் தேதியன்று புவனேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் தொலைபேசி மூலம் பேசி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பாலியல் டார்ச்சர் செய்ததால் புவனேஸ்வரி மனமுடைந்தார். இதையடுத்து விரக்தியில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் கருகிய நிலையில் புவனேஸ்வரி கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் தலைமை ஆசிரியர் மதிவாணனை அதிரடியாக கைது செய்னர்.

பின்னர் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி நேற்று தீர்ப்பளித்தார். தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மதிவாணனுக்கு 5 வருட சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையம் அனுபவிக்க வேண்டும். இது தவிர பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி இருந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்