SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு

2017-05-31@ 00:52:21

மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால், சவால்களை கடந்து மருத்துவ படிப்பை எட்டிப்பிடிப்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வருமானம் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம்.
பிளஸ் 2வில் அறிவியல் பிரிவை (பர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன.

நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3 ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.

பிசியோதெரபி:  உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவ முறை பிசியோதெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. பிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப்படிப்பு. பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய் ஈட்டலாம்.

எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப்படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனைக்கு கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றை கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும்.

பார்மஸி:  மருந்து, மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம். அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி.  4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம் சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.

லேப் டெக்னீஷியன்:  ஓராண்டு பட்டயப்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், ரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம்.

ரேடியோ கிராபி: 2 ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்டயப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆஞ்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.

ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவது பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்