SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை அருகே தங்கை தற்கொலைக்கு காரணம் பாதிரியாரிடம் அழைத்துச்சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை

2017-05-29@ 00:16:13

நெல்லை: நெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்த பண்டாரத்தின் மனைவி பூரணவள்ளி (55). நேற்று சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது, அப்பகுதியிலுள்ள பாலத்தின் அருகே வைத்து பைக்கில் வந்த மர்ம நபர் பூரணவள்ளியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியிலேயே பூரணவள்ளி இறந்தார். தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் தாழையூத்து அருகேயுள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன்(25) பூரணவள்ளியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, தூத்துக்குடி எட்டையபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜோசுவா என்ற இம்மானுவேல்ராஜ்(39). மனைவி, குழந்தைகளை பிரிந்து வந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் ஒரு வீட்டில் ஜெபகூட்டம் நடத்தி வந்தார். இதில் நவநீதகிருஷ்ணனின் தங்கையான அனுசுயாவை, உனக்கு அரசு வேலை கிடைக்கும். சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள் என்று பூரணவள்ளி கூறி, ஜோசுவா வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். ஜோசுவா, அனுசுயாவை வெளியூர்களுக்கு அழைத்துச்சென்று நாசமாக்கி விட்டார்.
 
இந்நிலையில் நவநீத கிருஷ்ண னின் தங்கை உள்ளிட்ட 4 பெண்கள் தாழையூத்து போலீசில் எங்களது வாழ்க்கையை போதகர் ஜோசுவா பாழ்படுத்தி விட்டதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில் போலீசார், ஜோசுவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து நவநீதகிருஷ்ணனின் தங்கையை, சிலர் அவதூறாக பேசியதால் அவமானம் அடைந்த அவர் தாழையூத்து அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் வாழ்வை சீரழித்த ஜோசுவாவை கொல்ல திட்டமிட்டதாகவும். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால், இதற்கு காரணமான பூரணவள்ளியை நேற்று சர்ச்சுக்கு சென்றுவிட்டு வரும்போது வெட்டி கொலை செய்தேன் என்று நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பூரண வள்ளிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்