SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமற்ற உணவு வினியோகம் கேட்டரிங் நிறுவனத்துக்கு சீல

2012-11-09@ 02:32:29

சென்னை : சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து ரயில்வே பயணிகளுக்கு வினியோகம் செய்த தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேற்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சீல் வைத்தனர். ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, கேட்டரிங் வசதியை ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களிலும், சில நீண்ட தூர ரயில்களிலும் இந்த வசதி உள்ளது. இந்த பணிக்காக தனியாருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் அளவை குறைத்து வழங்குவது, தரத்தில் குறைபாடு குறித்து பயணிகளிடம் இருந்து புகார்களும் எழுந்துள்ளன. இதுபோல், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிகேகே கேட்டரிங் சர்வீஸ் மற்றும் ஆரென்கோ கேட்டரிங் ஆகிய நிறுவனங்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் உணவு தயாரித்து வழங்கி வந்தன.

இந்த கேட்டரிங் நிறுவனம் சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் இயங்கி வந்தது. இது சுகாதாரமற்ற நிலையில் இயங்குவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் மணி தலைமையிலான குழுவினர் நேற்று காலை அந்த உணவு கூடத்துக்கு சென்று, அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, இந்த நிறுவனங்கள் உணவு தயாரிப்பதற்கான தொழில் உரிமம் சென்னை மாநகராட்சியில் இருந்து பெறவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாததால் உணவு சமைக்கும் இடத்திலேயே தேங்கி கிடந்தது. இந்த சூழ்நிலையால் அண்டை வீட்டாருக்கும், இங்கு தயாரிக்கும் உணவை உண்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அந்த உணவு தயாரிக்கும் நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். மேலும், அந்த கேட்டரிங் நிறுவனத்துக்கான லைசென்சை ரத்து செய்யும்படி மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ரயில்வே நிர்வாகத்துக்கு சிபாரிசு செய்தனர். இதை தொடர்ந்து அந்த உணவு கூடத்துக்கான லைசென்சை ரத்து செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வழங்கிய சம்பவம் ரயில்வே பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் அனுமதியில்லாமலும், அடிப்படை சுகாதார வசதியில்லாமலும் நடைபெறும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்