SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊழலில் எடப்பாடிக்கு முதல் ரேங்க்: ராமதாஸ்

2017-05-20@ 06:19:26

சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 3321 மதுக்கடைகளை சட்ட போராட்டத்தின் மூலம் மூடவைத்ததற்காக பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாமக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மயிலை மாங்கொல்லையில் நேற்று பாராட்டு பொது கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜமுனா கேசவன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க தலைவர் குரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,  மாவட்ட செயலாளர்கள் ராம கன்னியப்பன், வெங்கடேசன், பாண்டியன், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வறட்சியால் 425 விவசாயிகள் தற்கொலை என்பது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா மூலம் ஆட்சி செய்யும் இந்த ஆட்சி சாக்கடையை விட மோசமான ஆட்சி. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். விஜயபாஸ்கர் ஊழல் செய்து கணக்கு எழுதிவைத்துள்ளார். இதை சிலர் பாராட்டுகின்றனர். நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். எதற்கு, விஜயபாஸ்கரை காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான். அமைச்சர் சரோஜா 6 வருடத்தில் 6 கோடி சம்பாதிக்க வேண்டும் என்று இலக்கு வைத்து ஊழல் செய்கிறார்.

மேலும் ஊழல் பட்டியலில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஊழலில் எதை சொல்லி எதை விடுவது. ஊழலில் ரேங்க் போட்டால் முதலிடத்தில் எடப்பாடிதான் இருப்பார். அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வைப்பு நிதியை ஏமாற்றியுள்ளது இந்த அரசு. நீட் தேர்வை எதிர்த்து பாமக போராடும். இவ்வாறு அவர் பேசினார்.
 பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும் இக் கூட்டத்தில் பேசினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

  • punecskfansipl

    ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

  • kanjipuramuthiram

    பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா

  • commonwealthwinners

    காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்