பூம்ரா, கரண் அபார பந்துவீச்சு பைனலில் மும்பை

2017-05-20@ 06:18:18

பெங்களூரு: நைட் ரைடர்ஸ் அணியுடனான ‘குவாலிபயர் 2’ ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. ஜஸ்பிரித் பூம்ரா, கரண் ஷர்மாவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய கொல்கத்தா அணி 18.5 ஓவரில் 107 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. சூரியகுமார் அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். ஜக்கி 28, கேப்டன் கம்பீர் 12, நரைன் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மும்பை பந்துவீச்சில் கரண் 4 ஓவரில் 16 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பூம்ரா 3 ஓவரில் 1 மெய்டன் உட்பட 7 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். ஜான்சன் 2, மலிங்கா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 14.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வென்றது. குருனல் பாண்டியா அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 42 ரன் (30 பந்து, 7 பவுண்டரி) விளாசினார். கேப்டன் ேராகித் ஷர்மா 26, பார்திவ் படேல் 14 ரன் எடுத்தனர். இதையடுத்து, ஐபிஎல் டி20 தொடரின் 10வது சீசன் இறுதிப் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. இப்போட்டி, ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் செய்திகள்
2019 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு குறித்து முடிவு… யுவராஜ் சிங் சொல்கிறார்
நடுவரின் தவறால் தோல்வி... ஐதராபாத் ரசிகர்கள் ஆத்திரம்
பிஎஸ்ஏ உலக டூர் ஸ்குவாஷ் சென்னை வீரர் வேலவன் சாம்பியன்
ஆண்டின் சிறந்த வீரர் விருது முகமது சாலா தேர்வு
அக்டோபரில் அம்மாவாகிறார் சானியா
ட்வீட் கார்னர்
24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!
பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!
காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது
LatestNews
ஏரியில் மூழ்கி 2 நண்பர்கள் பலி
00:17
மே 2ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்க திட்டம்
21:43
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: டெல்லி அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு
21:41
திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட பைனான்சியர் தனபால் உளுந்தூர்பேட்டையில் மீட்பு
21:35
தமிழன் கோழை இல்லை, வேண்டிய இடத்தில் வீரத்தை காட்டுவான்: கவிஞர் வைரமுத்து
21:29
சென்னை வியாசர்பாடியில் துப்பாக்கிமுனையில் 2 ரவுடிகள் கைது
21:00