SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு பழிதீர்க்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

2017-05-20@ 01:47:35

புதுடெல்லி: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியிருப்பதாவது: சிபிஐ, அமலாக்க பிரிவு, வருமான வரித் துறை, டெல்லி காவல் துறை என ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை மத்திய அரசு ெதாடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்து வருகிறது.

 ஆனால், ஆம் ஆத்மிக்கு எதிராக ஒரு துளி ஆதாரம் கூட இதுவரை கிடைக்கவில்லை.  எதிரக்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். கபில் மிஸ்ராவை பாஜ தூண்டி விட்டு ஆம் ஆத்மி மீது புகார்களை அடுக்கி வருகிறது. ஹவாலா ஆப்பரேட்டர்களின் தொடர்பு காரணமாக, ரூபாய் நோட்டு மதிப்பு ரத்து நடவடிக்கைக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்தார் என்ற கபில் மிஸ்ராவின்  புதிய குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த தயாரா? என சவால் விடுத்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்