SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்ற மத்திய அரசுக்கு அறிவுரை

2017-05-20@ 01:45:52

புதுடெல்லி: பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வரும் வகையில் வசதிகளை அளிப்பதுடன் இது குறித்த தணிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிபுன் மல்ஹோத்ர என்பவர் தாக்கல் செய்த பொது நலன் வழக்கு தலைமை நீதிபதி (ெபாறுப்பு) கீதா மித்தல், நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. இப்பிரச்னை மிக முக்கியமானது. டெல்லியின் கட்டட விதிகளை மத்திய அரசு ஆராய்ந்து அதில் மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையிலான வசதிகளை தர விதிகள் உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். முந்தைய உத்தரவில், வாகன நிறுத்துமிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக நிறுத்துமிடங்களை ஒதுக்க  மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சிகள், கல்லூரிகள், பள்ளிகள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட அனைத்து அமைப்புக்கும் உத்தரவிட்டிருந்தோம்.

 இதற்காக சிறப்பு தணிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தோம். இதில் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர்கள், அவரது உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டோம். இப்பிரச்னையின் தீவிரம் காரணமாக ஒரு வாரத்துக்குள் அனைத்து கட்டடங்களும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டுக்கு உகந்த முறையில் உள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தணிக்கை முறை குறித்து ஏதாவது சட்டம் உள்ளதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொது நலன் மனுவில், சாலைகள், நடைபாதைகள், பொது இடங்கள், அரசு அலுவலகள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்ததாக இல்லை.  அரசு பேருந்துகள், அனைத்து வகை வாகனங்கள், ரயில் பெட்டிகள், விமானம், மற்றும் காத்திருப்பு அறைகளில் மாற்றுத் திறனாளிகள் தனிமைப்படுத்தாமல் இருக்க விதிகளை வகுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்திருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2017

    23-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்