SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறை கைதிகளின் உரிமைகள் தொடர்பான வழக்கு திஹார் சிறை டி.ஜி. கருத்தை ேகட்கிறது ஐகோர்ட்

2017-05-20@ 01:43:26

புதுடெல்லி: சிறையில் உள்ள கைதிகளை வாரத்துக்கு ஒரு முறை சந்திக்க அனுமதிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் திஹார் சிறைத் தலைவர் (டிஜி)யின் கருத்துகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குரைஞர் அமித் சஹானி என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, கைதிகளை அவர்களது வழக்குரைஞர்கள் வாரம் ஒரு முறைதான் சந்திக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் கைதிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. கைதிகளுக்கு சட்ட ஆலோசனை கிடைக்காமல் போகிறது. இது சட்ட விரோதமானது எனக் கூறியிருந்தார்.

 இந்த புதிய விதிமுறை காரணமாக, வழக்குரைஞர்கள் நீண்ட நேரம் திஹார் சிறைக்கு வெளிேய காத்திருக்க  வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கைதிகளை பார்க்க வரும் வழக்குரைஞர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். காத்திருப்பு பகுதியில் இருக்கைகள், குடிநீர், வாகன நிறுத்துமிடம், அவற்றுக்கான அனுமதி ஸ்டிக்கர்கள் போன்ற வசதிகளை அளிக்கவும்  மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி (பொறுப்பு)  கீதா மித்தல், நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. இது குறித்து திஹார் சிறையின் டைரக்டர் ஜெனரல் சுதீர் யாதவ் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bushwifecondolences

  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

 • fireaccidentsafety

  சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

 • punecskfansipl

  ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

 • kanjipuramuthiram

  பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா

 • commonwealthwinners

  காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்