SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 புதிய அமைச்சர்கள் நியமனம் கோப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல்

2017-05-20@ 01:40:11

புதுடெல்லி: அமைச்சரவையில் புதியதாக அறிவிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, கடந்த 2 வாரங்களாக இழுபறி நீடித்து வந்த அமைச்சர்கள் நியமனம் பிரச்னை தீர்ந்துள்ளது. டெல்லி மாநில அரசில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோரை அமைச்சர்களாக நியமனம் செய்வது குறித்த கோப்புகள் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. டெல்லி அரசியல் சாசன சட்டப்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட கோப்புகள் அங்கு கண்டுக் கொள்ளப்படாமல் இருப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை அன்று குறை கூறியிருந்தார். இது பற்றி கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘மாநில அரசு மீதான பகையை தீர்த்துக் கொள்ள மத்திய அரசு டெல்லி மக்களை பழிவாங்கக் கூடாது’’, என குற்றச்சாட்டு கூறினார்.

மத்திய அரசை குற்றஞ்சாட்டி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில்,  ‘‘இந்த மாதம் 6ம் தேதி அனுப்பி வைத்த கோப்புகளை கிடப்பில் போட்டு  வைத்திருப்பது முறையற்றது. கோப்புகளை தாமதப்படுத்தும் அரசின் செயல் அரசியல்  சாசன சட்டத்தை மீறுவதாகும்’’, என தாக்குதல் தொடுக்கும் விதமாக பேசினார். குறை கூறிய இரு தினங்களில், ‘‘கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதி பரிந்துரைக்கு அனுப்பி வைத்துள்ளோம்’’, என உள்துறை நேற்று முன்தினம் பதில் தெரிவித்தது. இதையடுத்து நியமனத்திற்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்துள் ளார்.

அமைச்சர்கள் இலாகா விவரம்

ஜனாதிபதியின் அனுமதி கிடைத்த சில மணி நேரத்தில், துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில், புதிய அமைச்சர்களுக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கெஜ்ரிவால், சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சரவையில் இடம்பெற்று அமைச்சர்களின் இலாகாக்களில் பெரும் மாற்றம் செய்து முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.
முதல்வர் கெஜ்ரிவால் - துறை எதுவும் இல்லை.

துணை முதல்வர் சிசோடியா - நிதி, கல்வி, திட்டமிடல், நிலம் மற்றும் கட்டிடம், வருவாய், விஜிலென்ஸ் சேவை. சந்தேயந்தர் ஜெயின் - நகர்புற மேம்பாடு, சுகாதாரம், தொழில்கள், பொதுப்பணித்துறை, உள்துறை. கைலாஷ் கெலாட் - போக்குவரத்து துறை, சட்டம் மற்றும் நீதி, தகவல் தொழில்நுட்பம், நிர்வாக சீர்திருத்தங்கள்.  ராஜேந்தர் பால் கவுதம் - குடிநீர் வழங்கல் துறை, சமூக நலம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் நலத்துறை, சுற்றுலா, கலாசாரம், குருத்வார தேர்தல்கள். கோபால் ராய்-தொழிலாளர் நலத்துறை. இம்ரான் ஹூசைன்-பொது விநியோகம். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்