SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெற்கு மாநகராட்சி புதிய மேயராக பாஜவின் கமல்ஜீத் ஷெராவத் தேர்வு

2017-05-20@ 01:38:01

புதுடெல்லி: தெற்கு மாநகராட்சி மேயராக பாஜ கவுன்சிலர் கமல்ஜீத் ஷெராவத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அவருடன் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். டெல்லியின் 3 மாநகராட்சிக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 181 வார்டை பாஜ கைப்பற்றி மூன்றாவது முறையாக மாநகராட்சிகளின் நிர்வாகப் பொறுப்பேற்றது. பாஜவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியைத் தழுவின. மாநகராட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மேயர் தேர்தலில் உறுப்பினர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு காலத்தில், முதலாண்டு பெண்கள் பிரிவு, இரண்டாம் ஆண்டு பொதுப்பிரிவு, அடுத்ததாக ரிசர்வ் பிரிவு, 4, 5வது ஆண்டுகள் மீண்டும் பொது பிரிவு என கவுன்சிலர்களுக்கு மேயர் பதவிக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, மேயர் பதவிக்கு கமல்ஜீத் ஷெராவத், துணை மேயர் பதவிக்கு கைலாஷ் சங்க்லா ஆகியோர் பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டனர். இருவரையும் எதிர்த்து பிற கட்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆகவே, அவர்களின் வெற்றி, மனு தாக்கல் செய்தபோதே உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தெற்கு மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் மேயராக கமல்ஜீத் ஷெராவத், துணை மேயராக கைலாஷ் சங்க்லா ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். தெற்கு மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். பாஜ கவுன்சிலர்களில் பூபேந்தர் குப்தா நிலைக்குழு தலைவராகவும், ஷிக்கா ராய், நந்தனி சர்மா, துள்சி ஜோஷி ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்வானார்கள். உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பூர்வா, வேட்புமனுவை பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆன்ட்ரூஸ் கஞ்ச் வார்டு கவுன்சிலர் அபிஷேக் தத், ஹஸ்த்சல் வார்டு ஆம் ஆத்மி கவுன்சிலர் அஷோக் குமார் ஆகியோரும் நிலைக்குழு உறுப்பினரானார்கள்.

எந்த கட்சிக்கு எவ்வளவு?: மொத்தம் 104 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் பாஜ உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 ஆகவும், ஆம் ஆத்மிக்கு 16, காங்கிரசுக்கு 12, சமாஜ்வாடி கட்சி 1, இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு 1 மற்றும் 4 சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர்.வடக்கு மாநகராட்சியின் சராய் பிபல் வார்டுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதிகமான வாக்கு பெற்றவர் தெற்கு மாநகராட்சிக்கு உள்பட்ட துவாரகா ‘பி’ வார்டில் போட்டியிட்ட கமல்ஜீத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சுஷ்மா பன்சாலை 9,866 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுஷ்மாவுக்கு 4,747 ஓட்டுகள் மட்டும் கிடைத்தது. கமல்ஜீத் பெற்ற 14,613 ஓட்டுகள்தான் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகம் கிடைத்த வாக்குகளாகும். கடந்த ஆண்டு மேயர் தேர்தலில் பாஜவுக்கும், காங்கிரசுக்கும் கடுமையான போட்டி நிலவியது. அதில் ஜனக்புரி வார்டு பாஜ கவுன்சிலர் ஷ்யாம் சர்மா காங்கிரஸ் கவுன்சிலர் ப்ரவீன் ராணாவை 25 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மேயரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SvetlanaVillageRussia

  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

 • karaneeswarargod

  காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

 • TorontoPedestriansAttack

  கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Sachin45thBirthday

  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

 • SingaporeperumalTemple

  164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்