SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“துரை” ஏரி விரைவில் புனரமைக்கப்படும் மேயர் பத்மாவதி உறுதி

2017-05-20@ 01:36:31

பெங்களூரு: “துரை” ஏரியை புனரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பத்மாவதி உறுதி அளித்தார். பெங்களூரு உத்தரஹள்ளி துரை ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியது. சாக்கடை கழிவு நீர் இதில் கலப்பதால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சிக்கு பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து மேயர் பத்மாவதி மற்றும் பொறியாளர்கள் நேற்று முன்தினம் அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தினர். சில மணி நேரம் ஆய்வு நடத்திய மேயர் பத்மாவதி, ஏரிக்குள் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் மேயர் பத்மாவதி கூறியதாவது:
ஏரியில் கழிவு நீ்ர் கலப்பதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 அத்துடன் ஏரியில் கழிவுகளை வீசும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துரை ஏரி மட்டும் இன்றி, மாநகரிலுள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த ஏரியை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து  மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றார். முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயர் பத்மாவதியை சூழ்ந்துகொண்டு, ஏரியில் இருந்து வீசும் துர்நாற்றத்தை பல கிமீ. தூரம் வரை உணர முடிகிறது. இதுவரை  ஐந்து மேயர்கள்  இங்கு வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை எந்த வேலையும் நடைபெறவில்லை என்று தங்கள் குறைகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன