SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளத்தூர் எவர்வின் பள்ளி சாதனை

2017-05-20@ 01:23:30

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 439 மாணவர்கள் எழுதினர். இதில் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 70 மாணவர்கள் 475 முதல் 495 வரையிலான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 மொத்தம் 112 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும், 164 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 236 மாணவர்கள் 425 மதிப்பெண்களுக்கு மேலும், 308 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் சிஇஓ மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி மற்றும் துணை முதல்வர் நிலவரசி ஆகியோர் பாராட்டி இனிப்பு வழங்கினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

  • stella_unavu

    ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற பாதுகாப்பான உணவு திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X