SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 மணி நேரம் காத்திருக்க வைத்து சர்வர் பிரச்னை என கூறியதால் ஆத்திரம் ஜிஎஸ்டி சாலையில் பொதுமக்கள் மறியல்

2017-05-20@ 01:20:47

தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வாங்க வந்த பொதுமக்களை 5 மணி நேரம் காத்திருக்க வைத்து சர்வர் பிரச்னை என கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் சானடோரியத்தில் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு ஜாதி, பட்டா, வருமானம், இருப்பிடம் உள்பட பல்வேறு சான்று மற்றும் ஆதார் பதிவு, வருவாய்த்துறையின் பல்வேறு ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சேலையூர், சிட்லபாக்கம் போன்ற இடங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சான்றிதழ்கள் வாங்க வந்து செல்கின்றனர்.

ஆனால், அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததாலும், அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதாலும் பல மணி நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருந்தும் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள், பட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்காக பொதுமக்கள் காலை 6 மணி முதல் காத்துகிடந்தனர். காலை 9.30 மணியளவில் அலுவலக ஊழியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால், வெகு நேரமாகியும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியை தொடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள், சர்வர் பிரச்னையாக இருக்கிறது சிறிது நேரம் காத்திருங்கள் என்றனர்.

 இருப்பினும் ஒரு மணி நேரம் மேலாகியும் ஊழியர்கள் அழைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் மீண்டும் சென்று முறையிட்டனர். அப்போதும், நீங்கள் காத்திருங்கள் சர்வர் பிரச்னை சரியானவுடன் கூப்புடுகிறேன் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 5 மணி நேரம் மேல் காத்திருந்தும் ஊழியர்கள் சான்றிதழ்கள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சுமார் 11.30 மணியளவில் பொதுமக்கள் மீண்டும் சென்று கேட்டுள்ளனர். அப்போது, ஊழியர்கள், ‘‘சர்வர் வேலை செய்யவில்லை. நாளைக்கு வாருங்கள் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், காலை 6 மணியில் இருந்து எங்கள் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து மணிக்கணக்கில் காத்து கிடக்கிறோம்.

 நீங்கள் 10 மணிக்கு பொறுமையாக வேலைக்கு வந்து, அப்போதே சர்வர் பிரச்னை என கூறாமல், 5 மணி நேரத்துக்கு பின்னர், நாங்கள் கேட்டபிறகு கூறுகின்றனர் என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென 100க்கு மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், ஆர்டிஓ ரவிசந்திரன், தாம்பரம் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள்,   பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பழுதான சர்வர் சரி செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரையும் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.


70 பேருக்கு மட்டுமே சான்றிதழ்

பொதுமக்கள் கூறுகையில், ‘‘சான்றிதழ்கள் பெறுவதற்காக எப்போது வந்தாலும் சர்வர் பிரச்னை என கூறி நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என திருப்பி அனுப்புகிறார்கள். இங்கு 2 கம்ப்யூட்டர்கள், 2 ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 70 பேருக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்குகின்றனர். அதற்கு மேல் வருபவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதுகுறித்து கேட்டால் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே, பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்க கூடுதல் ஊழியர்களை பணிக்கு சேர்க்கவும், சர்வர் பிரச்னை வராமல் தடுத்ககவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்துகின்றனர்.

எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை

சர்வர் பிரச்னை குறித்து தாம்பரம் வட்டாட்சியரிடம் கேட்டபோது, ‘‘எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தால், தான் நான் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். இதுபற்றி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யுங்கள்’’ என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன