SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்

2017-05-20@ 01:19:01

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவலங்காடு ரயில்நிலையம் அருகே  ஒதுக்கு ரயில்பாதையில்  பொறியியல் மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால் 3 மின்சார ரயில்கள் மே 20ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை கடம்பத்தூர்- திருவலங்காடு இடையே விரைவுப்பாதையில் இயக்கப்படும். அதனால் இந்த நாட்களில் 3 மின்சார  ரயில்கள் செஞ்சிபானம்பாக்கம் ரயில்நிலையத்தில் நிற்காது.

அதன்படி  சென்னை சென்ட்ரலில் இருந்து மே 20, 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து  மே 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ஆகியவை செஞ்சி பானம்பாக்கத்தில் நிற்காமல் செல்லும். அதேபோல் அரக்கோணத்தில் இருந்து மே 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் அரக்கோணம் - திருவலங்காடு இடையே விரைவுப்பாதையில் இயக்கப்படும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • poRURlaketyugbyvfgy

    போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

  • 20YEARfraewelllsjhip

    இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

  • 24-06-2017

    24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • nasaWORldLIGHestSATELL

    நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட ‘கலாம் சாட்’ செயற்கைகோள்... தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டுகள்!

  • gulfCOASTcindy

    புயல் காரணமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பலத்த மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்