விளையாட்டு துளிகள்

2017-05-20@ 01:08:13

சீனாவில் நடைபெறும் உலக கோப்பை வில்வித்தை போட்டியின் ஆண்கள் காம்பவுண்ட் பிரிவு பைனலில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்து மகளிர் ஹாக்கி அணியுடன் நடந்த 4வது போட்டியில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை பெற்றது ஹாக்கி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தனது 100வது சர்வதேச போட்டியில் விளையாடி சாதனை மைல்கல்லை எட்டினார்.
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்து உலக ஊக்கமருந்து தடுப்புக் கழகம் ‘வாடா’ ஆலோசித்து வருவதாக அதன் தலைவர் கிரெய்க் ரீடி தெரிவித்துள்ளார். இந்த தடை காரணமாகரஷ்ய தடகள வீரர், வீராங்கனைகள் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாதது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மணிஷ் பாண்டே காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்) சேர்க்கப்பட்டுள்ளார். 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள கார்த்திக், 1313 ரன் எடுத்துள்ளார் (சராசரி 27.93). அவர் இந்திய அணிக்காக மொத்தம் 24 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார்.
டி20 போட்டிகள் மழையால் பாதிக்கப்படும்போது புதிய இலக்கை நிர்ணயிக்க டக்வொர்த்/லூயிஸ் விதியை உபயோகிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் 10வது சீசன் எலிமினேட்டரில், இந்த விதி காரணமாக நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது. புனே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இது குறித்து கூறுகையில், ‘ஒருநாள் போட்டிகளுக்கான டி/எல் விதியை டி20 போட்டியில் அமல்படுத்துப்போது இலக்கை துரத்தும் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதனால், ஓவர்களை குறைப்பதுடன் சேஸ் செய்யும் அணியின் விக்கெட் எண்ணிக்கையை குறைப்பது அவசியம்’ என்றார்.
மேலும் செய்திகள்
ட்வீட் கார்னர்...ராக் ஸ்டார்ஸ் நாங்க!
வெற்றிதான் முக்கியம்... ஆரஞ்சு தொப்பி அல்ல! : கோஹ்லி கருத்து
பதற்றமின்றி விளையாட உதவினார் எவின் லூயிஸ்...
சில்லி பாயின்ட்...
கவுன்டி கிரிக்கெட்டில் இஷாந்த் அசத்தல்
புனேவில் தண்ணீர் தட்டுப்பாடு ... சிஎஸ்கே போட்டிகளுக்கு சிக்கல்?
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்
சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!
பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
LatestNews
திருவண்ணாமலை சித்திரா பவுர்ணமிக்கு 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
15:15
தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
15:09
நிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு
14:54
பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்
14:54
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா
14:48
மதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது
14:39