SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் 4 நாடுகள் கிரிக்கெட் தொடர் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

2017-05-20@ 01:05:26

போட்செப்ஸ்ட்ரூம்: மகளிர் 4 நாடுகள் ஒருநாள் போட்டித் தொடரில், ஜிம்பாப்வேக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் இந்த தொடரில், மற்ற 3 அணிகளாக இந்தியா, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. போட்செப்ஸ்ட்ரூம், சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 42.3 ஓவரில் 98 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

 சிபோ முகெரி அதிகபட்சமாக 34 ரன் (60 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். ஜோசபின் கோமோ27, முபாசிக்வா 12, பிரீசியஸ் மராங்கே 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் தலா 4 விக்கெட், ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்மான்பிரீத் கவுர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க ஜிம்பாப்வே பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலிக்கவில்லை. இந்தியா 16 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 99 ரன் எடுத்து மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. வேதா 50 ரன் (51 பந்து, 9 பவுண்டரி), ஹர்மான்பிரீத் 39 ரன்னுடன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 17 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.

இந்திய அணி 6 லீக் ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. தென் ஆப்ரிக்க அணியும் 5 வெற்றி பெற்ற நிலையில், மொத்த ரன்ரேட் அடிப்படையில் 2வதாக வந்தது. ஜிம்பாப்வே 8 புள்ளிகளுடன் 3வது இடமும், ஒரு வெற்றி கூட பெற முடியாத அயர்லாந்து கடைசி இடமும் பிடித்தன. நாளை பிற்பகல் 1.30க்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் 3வது இடத்துக்காக மோதுகின்றன. அதே நேரத்தில் மற்றொரு மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் சாம்பியன் பட்டம் வெல்ல பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SvetlanaVillageRussia

  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

 • karaneeswarargod

  காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

 • TorontoPedestriansAttack

  கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Sachin45thBirthday

  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

 • SingaporeperumalTemple

  164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்