SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஹாலெப்

2017-05-20@ 01:04:05

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ரோமானிய வீராங்கனை சிமோனா ஹாலெப் தகுதி பெற்றார். கால் இறுதியில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டுடன் நேற்று மோதிய ஹாலெப் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கோன்டாவெய்ட் கடுமையாகப் போராடினாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் கரோலினா பிளிஸ்கோவா (செக்.), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கார்பினி முகுருசா (ஸ்பெயின்) ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - யரோஸ்லவா ஷ்வெடோவா (கஜகிஸ்தான்) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதியில் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்னர் 7-6 (7-3), 2-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), ஜுவன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), டொமினிக் தியம் (ஆஸ்திரியா) ஆகியோர் 3வது சுற்றில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினர். கால் இறுதியில் நடால் - தியம், ஜோகோவிச் - டெல்போட்ரோ மோதுகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - பாப்லோ கியூவஸ் (உருகுவே) ஜோடி, பிரான்சின் பியரி ஹெர்பெர்ட் - நிகோலஸ் மஹுத் ஜோடியுடன் மோதுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-08-2017

    22-08-2017 இன்றயை சிறப்பு படங்கள்

  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்