SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்

2017-05-20@ 01:02:00

புதுடெல்லி:  ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டில் முதல் முறையாக விற்பனை சரிவை சந்தித்தது. அமெரிக்கா, சீனா உட்பட சர்வதேச சந்தைகள் காலை வாரியபோதும், ஐபோன் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருந்தது. இதனால் நீண்டகாலமாக புறக்கணித்து வந்த இந்திய சந்தையின் மீது ஆப்பிள் கவனம் திரும்பியது. கடந்த ஆண்டு மே மாதம் ஆப்பிள் சிஇஓ டிம் குக் வருகைக்கு பிறகு, இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இதற்காக, உற்பத்தி செய்யும் நாட்டிலேயே உதிரி பாகம் கொள்முதல், வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால், இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையில், பெங்களூருவில் தைவான் நிறுவனத்துடன் இணைந்து, ஆப்பிள் எஸ்இ மாடல்களை உற்பத்தி செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

 ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடலான ஐபோன் எஸ்இ 4 அங்குல திரை கொண்டது. முதல் கட்டமாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் ‘இந்திய தயாரிப்பு’ முத்திரையுடன் சந்தையில் கிடைக்கும். உற்பத்தி துவங்கி விட்டதால் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரலாம் என ஆப்பிள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐபோன் எஸ்இ அமெரிக்காவில் 399 டாலருக்கு (சுமார் ரூ.25,500) விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையிலேயே சில ஆன்லைன் இணைய தளங்களில் இது ரூ.20,999 முதல் விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இறக்குமதி செலவு மிச்சம். எனவே இதைவிட குறைந்த விலைக்கு இந்த போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

  • karaneeswarargod

    காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

  • TorontoPedestriansAttack

    கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Sachin45thBirthday

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

  • SingaporeperumalTemple

    164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்