SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி யாரும் என்னை வளர்க்கவில்லை

2017-05-20@ 00:58:16

ஊட்டி: ஊட்டியில், மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர். கட்சியில் யாரும் என்ன வளர்க்கவில்லை என்று ஓபிஎஸ்சுக்கு பதிலடி கொடுத்தார். திண்டுக்கல்லில் கடந்த புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமி நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது நகைப்பாக உள்ளது என்று விமர்சித்திருந்தார். இதற்கு ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121வது மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: என்னை யாரோ சிலர் கட்சியில் வளர்த்ததாக கூறியுள்ளனர். நான் யாராலும் கட்சியில் வளர்க்கப்படவில்லை. என்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அடையாளம் கண்டார். நான் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போதே கட்சியில் கடந்த 1974ம் ஆண்டு சேர்ந்தேன். 1985ல் ஜெ.பேரவை செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். 1989ல் ஜெயலலிதாவின் கட்சியில் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டேன். மீண்டும் 1991ல் எம்.எல்.ஏ.வாகவும், 1998ல் திருச்ெசங்கோடு எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டேன். 2011, 2016ல் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவுடன் ஜெயலலிதா தலைமையிலான அரசில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினேன்.

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறேன். நான் படிப்படியாக உயர்ந்தேன்’’ என்று ஆவேசமாக பேசினார். மேலும், ஒரு குட்டி கதையை குறிப்பிட்டு இறுதியில், மறைமுகமாக யார் பெயரையும் குறிப்பிடாமல், `தர்மத்தைப் பற்றிய பேசுகிறவர்கள் அதர்மத்தைச் செய்தால், மக்கள் கதாயுதம் வடிவத்தில் வந்து பாடம் கற்பிப்பார்கள்’ என்று கூறினார்.

சட்டமன்றம் விரைவில் கூடும்
ஊட்டியில் முதல்வர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘விரைவில் தமிழக சட்டமன்றம் கூட்டப்படும். நீட் தேர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சில்ஹல்லா நீர் மின் திட்டப்பணிகளை விரைவில் தொடங்க பரிசீலிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். முன்னதாக, பூங்காவை அவர் சுற்றிப்பார்த்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்