SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்

2017-05-20@ 00:57:08

சென்னை: தமிழ் மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க ேவண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மன்றம் தீர்மானிக்கிறது என்று அண்ணா தலைமையில் அமைந்த முதல் திமுக அரசு 23-1-1968ல் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பொன்விழா ஆண்டில் நாம் இன்றைக்குப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

திமுக அரசு கொண்டு வந்த தமிழ் கற்கும் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து சி.பி. எஸ்.இ. பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம் என்று 18-9-2014ல் அதிமுக அரசுக்கு பெயரளவிற்கு ஆணை வெளியிட்டாலும், இன்று வரை அந்த அரசு ஆணை முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள், அதற்கேற்ற விதிமுறைகள் போன்ற வற்றை ஏற்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து தாமதம் செய்து வருவதால் தமிழ் அல் லாத மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் பொதுத் தேர்வு எழுத, தொடர்ந்து விலக்கு பெற்று வருகிறார்கள். அதே சமயம் மத்தியில் உள்ள பாஜ அரசு கண்ணை மூடிக்கொண்டு இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நேரத்தில் தமிழ் மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது.

ஆனால், தமிழ் மொழி பற்றிய சிந்தனையை வருங்கால தலைமுறையிடம் முழுவதுமாக மறக் கடித்து விட வேண்டும் என்று திட்டம் போட்டு மத்திய அரசு செயல்படுவது போல், அதிமுக அரசும் செயல்படுவது கவலையளிப்பது மட்டுமின்றி, தமிழ் மொழியின் மீது மாணவ, மாணவியருக்கு இருக்கும் பற்று மற்றும் பாசத்தை பட்டுப் போகச் செய்யும் ஆபத்தான முயற்சியாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். அரசுப் பள்ளிகளிலும் போதிய தமிழாசி ரியர்களை நியமித்து, தமிழ் மொழி கற்கும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் விதத்தில், ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் அதிமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு வாழ்த்து

மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கல்லூரி கல்விக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு விருப்ப மான பிரிவுகளில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து, எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் நாட்டி ற்கும் உழைக்கும் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, நல்ல நிர்வாகி களாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துவதோடு, இந்தப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் தங்கள் கல்வியை தொடருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன