SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது அதிமுக்கியமான தருணம்...

2017-05-20@ 00:39:30

பிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யவே வரிசைகட்டி நிற்பார்கள். வீட்டில் உள்ள ரத்த பந்தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் என அத்தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடியாக்களை குவிப்பார்கள். சிரித்துக் ெகாண்டே இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுங்கள். பெரும்பாலான பெற்றோர், தான் படிக்க விரும்பி படிக்க முடியாமல் போன பாடப்பிரிவை தங்களது குழந்தைகள் மீது திணிக்கின்றனர். இன்னொரு பக்கம் இன்றைக்கு மார்க்கெட்டில் அதிகம் பேர் தேர்வு செய்யும் துறையில் பிடித்து தள்ளி விடுவதையும், பெற்றோர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

 உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் ஒரு சில நாட்களில் அவுட் டேட்டட் ஆகி விடுகிறது. வேலைச் சந்தையிலும் இதே நிலை தான். மார்க்கெட் டிரண்டுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாகிறது. உச்சத்தில் இருக்கும் பல விஷயங்கள் சுவடே இன்றி காணாமல் போகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது. சமூகத்தின் தேவைக்கு ஏற்ப அதற்கான வாய்ப்புகளும் மாறி வருகிறது. நீங்கள் படித்து முடித்து வெளியில் வரும் போது, அதாவது எந்த ஆண்டில் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த ஆண்டில் எந்த துறைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதை திட்டமிட வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகளும், ஆலோசனைகளும் இந்த இடத்தில் உங்களுக்கு வழிகாட்டும். முதலில் மார்க்கெட் டிரெண்ட், வேலைக்கான ேதவைகள், தொழில் வாய்ப்புகள், அரசு வெளியிடும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

இதற்கான விஷயங்களை மாணவர்கள் இணையம், நட்பு வட்டம், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் சேகரித்து திட்டமிட வேண்டும்.
குழந்தைகளின் திறமை மற்றும் விருப்பம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் உயர்கல்வியில் பிடித்து தள்ளப்பட்டு, 50 சதவீதம் மாணவர்கள் தவறான வழிகாட்டுதலால், வாழ்க்கையை பெருஞ்சுமையாக கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உங்கள் குழந்தைக்கு எதில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என 10ம் வகுப்பிலேயே முடிவு செய்ய வேண்டும். அடுத்ததாக உயர்கல்வி எதை படிப்பது என்பதை மனதில் வைத்து பிளஸ் டூவில் அதற்கான குரூப்பை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிட்டு படிப்பதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை எளிதாக்கிக் கொள்ளலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan_protest123

  பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

 • omen_rain_fall

  ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

 • ramzan_fasting123

  உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

 • tamilnaduveyilend

  தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

 • 28-05-2018

  28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்