SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலைக் கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பட்டமளிப்பு விழா

2017-05-20@ 00:25:58

* பேராசிரியர்கள் புறக்கணிப்பு
* மாணவர் அமைப்பினர் கைது

சென்னை : அண்ணா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் காலியாக இருந்து வருகிறது.  இந்நிலையில் உயர் கல்வித்துறை செயலாளரே பல்கலைக் கழகத்தின் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வந்தார். துணைவேந்தர் இல்லாததால் அவருக்கு பதில் உயர்கல்வித்துறை செயலாளரின் கையொப்பத்துடன் பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேராசிரியர்கள் பட்டமளிப்பு விழாவை நேற்று புறக்கணித்தனர்.எனினும் திட்டமிட்டப்படி நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை இயக்குனர்கள் சிலர் கலந்துகொண்டனர். விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.

கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர். அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இளங்கலை, முதுகலை பொறியியல், பி.எச்டி, எம்.பில், எம்.எ ஸ்/எம்.டெக் படிப்புகளில் 2016ம் ஆண்டு பட்டம் பெற்ற 2,01,244 மாணவர்களுக்கு ஓராண்டுக்கு பின்னர் பட்டம் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டச் சான்றிதழில் துணைவேந்தரின் கையொப்பம் இடம்பெற வேண்டிய இடத்தில் கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் என்றும் அதன்கீழ் துணைவேந்தர் என்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கையொப்பம் அச்சிடப்பட்டிருந்தது. போலீஸ் குவிப்பு: பட்டமளிப்பு விழாவில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள், மாணவர்களின் அடையாள அட்டையை சோதனை செய்த பிறகே அவர்களை போலீசார் பல்கலைகழக வளாகத்துக்குள் அனுப்பினர்.

மாணவர் போராட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது என்று கூறி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை உயர் கல்வித்துறை செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்படும் பட்டம் செல்லாது என்று கூறி அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது பட்ட சான்றிதழ் மாதிரிகளை கிழித்து எறிந்தனர். அண்ணா பல்கலைகழக நுழைவு வாயில் அருகே அவர்கள் வந்தபோது, 20 பேரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்