SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேடுதல் வேட்டையில் பிடிபடுவோம் என்ற பயத்தில் காஞ்சிபுரத்தை நடுநடுங்க வைத்த தாதா ஸ்ரீதர் மலேசியாவுக்கு ஓட்டம்

2017-05-20@ 00:16:09

சென்னை : காஞ்சிபுரம் திருபருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (46). சாராய வியாபாரி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆளில்லாத சொத்துக்களை அபகரிப்பது, வயதானவர்களை மிரட்டி அவர்களின் சொத்துகளை கைப்பற்றுவது போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்காக குண்டர் தடுப்பு சட்டத்திலும் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த ஸ்ரீதர், போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அதன்பின்னர் துபாயில் இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம் காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவரை கைது செய்ய போலீசார் பல ஆண்டாக முயன்றும் இதுவரை முடியவில்லை.
இந்நிலையில், ஸ்ரீதரின் மனைவி, மகள், தம்பி மற்றும் கூட்டாளிகள் பெயரில் வாங்கிய சொத்துகளை முடக்கவேண்டும் என காஞ்சிபுரம் போலீசார், அமலாக்க துறைக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி சென்னை மண்டல அமலாக்க துறை அதிகாரிகள் ஸ்ரீதரின் ரூ.160 கோடி சொத்துகளை முடக்க முடிவு செய்து, கலெக்டர் அலுவலகம் எதிரேயுள்ள வீடு, காஞ்சிபுரம் பஸ்நிலையம் எதிரேயுள்ள காலிமனை என ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர்.

ஆனாலும், ஸ்ரீதர் தொடர்ந்து துபாயில் இருந்தபடி தனது கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் சப்- கலெக்டர் மகன் கொலை, அவரது சொத்துக்கள் அபகரிப்பு ஆகியவற்றில் ஸ்ரீதருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இது காஞ்சிபுரம் போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனால் ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஏடிஎஸ்பி ஸ்ரீநாத் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, துபாய் போலீசார் உதவியுடன் தரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதனை, தனது கூட்டாளிகள் மூலம் அறிந்த ஸ்ரீதர், துபாயில் இருந்து மலேசியாவுக்கு தப்பிச் சென்று பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மலேசியாவில் அவர் யார் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு உதவி செய்பவர்கள் யார் உள்ளிட்டவை குறித்து, தமிழக உள்துறை, மத்திய உள்துறை மூலம் இன்டர்போல் போலீசாரின் உதவியை காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரும் அமலாக்க துறையும் நாடி உள்ளனர். பல ஆண்டாக வெளிநாட்டில் இருந்தபடி தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல தாதா ஸ்ரீதரை கைது செய்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் துப்பு துலங்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

 • PresidentGreeceleaders

  அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்