SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்கட்டமைப்பு, அரசின் அலட்சியம் காரணமாக வீழ்ச்சியை நோக்கி செல்லும் : அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்

2017-05-20@ 00:11:15

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வில் 32 மாவட்டங்களில் 5,353 அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,538 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. இது அரசின் அலட்சிய போக்கை காட்டுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் கேள்வியை எழுப்பி உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 169 பள்ளிகள் மூலம் 10,263 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 10 ஆயிரத்து 26 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.69 சதவீதம் ஆகும். இந்த மாவட்டத்தில் 104 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 131 அரசுப் பள்ளிகள் மூலம் 5,113 பேர் தேர்வு எழுதியதில் 5,000 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 97.79 சதவீதம். இந்த மாவட்டத்தில் 81 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 217 அரசுப் பள்ளிகள் மூலம் 20,111 பேர் தேர்வு எழுதியதில் 18,001 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி வீதம் 89.51 சதவீதம். இந்த  மாவட்டத்தில் 32 அரசுப் பள்ளிகள் தான் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 223 அரசுப் பள்ளிகள் மூலம் 17,988 பேர் தேர்வு எழுதியதில் 15,202 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 84.51 சதவீதம். 29 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 28 அரசுப் பள்ளிகள் மூலம் 3,016 பேர் தேர்வு எழுதியதில் 2,757 பேர் தேர்ச்சி பெற்றனர். 3 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில் உள்கட்டமைப்பு மற்றும் அரசின் அலட்சியப்போக்கே சென்னை கல்வி மாவட்டம் கல்வியில் இத்தகைய பின் தங்கிய நிலையில் உள்ளது என்று குற்றம்சாட்டினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்